dimanche 7 novembre 2010

ஓதுவோம் வாருங்கள் தினமும் ஒரு ஆயத்


سُوۡرَةُ الکافِرون
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ
قُلۡ يَـٰٓأَيُّہَا ٱلۡڪَـٰفِرُونَ (١) لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ (٢) وَلَآ أَنتُمۡ عَـٰبِدُونَ مَآ أَعۡبُدُ (٣) وَلَآ أَنَا۟ عَابِدٌ۬ مَّا عَبَدتُّمۡ (٤) وَلَآ أَنتُمۡ عَـٰبِدُونَ مَآ أَعۡبُدُ (٥) لَكُمۡ دِينُكُمۡ وَلِىَ دِينِ (٦                                                                                                                            
                                                                                                                                                               
 
1(நபியே!) நீர் சொல்வீராக ;காபிர்களே !
2 நிங்கள் வணங்குபவற்றை  நான் வணங்கமாட்டேன் .
3இன்னும் ,நான் வணங்குகிறவனை நிங்கள் வணங்குகிறவர்கள் அல்லர்.
4அன்றியும் ,நிங்கள் வணங்குபவற்றை நான் வணங்குபவன் அல்லர்.
5மேலும் ,நான் வணங்குபவனை நிங்கள் வணங்குபவர்கள் அல்லர் 
6உங்களுக்கு உங்களுடை மார்க்கம் ;எனக்கு என்னுடைய மார்க்கம்"   

mercredi 3 novembre 2010

ஓதுவோம் வாருங்கள் தினமும் ஒரு ஆயத் ,  
سُوۡرَةُ الکَوثَر
بِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ

إِنَّآ أَعۡطَيۡنَـٰكَ ٱلۡكَوۡثَرَ (١) فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ (٢) إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ (٣
 
1  (நபியே )நிச்சயமாக நாம் உமக்கு கவ்சர் (என்ற தடாகத்தை ) கொடுத்திருக்கின்றோம்.
2  எனவே .உம் இறைவனுக்கு நீர் தொழுது ,குர்பானியும் கொடுப்பிராக .
3 நிச்சயமாக உம்முடைய பகைவன் (எவனோ )அவன் தான் சந்ததியற்றவன் .     

lundi 23 août 2010

சபதம் ஏற்போம்

பிற சமுதாயத்தாரிடமிருந்து நம்மைப் பிரித்துக் காட்டுவதே தொழுகை. (எனவே அத்)தொழுகையை முடிந்த வரை தங்களிடத்தே நிலை நிறுத்துங்கள்.




முடிந்தவரை ஈமான், ஈமானிய எண்ணங்களுடன் வாழ்வதோடு, வியாபாரம் பிற தேவைகளிலும் குர்ஆன், ஹதீஸை பின் பற்றுங்கள்.



தாங்கள் அறிந்துள்ள மார்க்க விஷயங்களை ஏதுமறியா, இறைச்சிந்தனையுள்ள முஸ்லிம் சமுதாயத்திடமும், ஏனைய பிற சமுதாயத்தாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளுங்கள். மேலும் மேலும் மார்க்க மற்றும் பொது விஷயங்களை அறிந்து கொள்ள இது வழி வகுக்கும்.



நாம் ஒரு தூய முஸ்லிமாக வாழ்வதில் பெருமிதம் கொள்வதோடு, நம்மைப் பார்த்து மார்க்கத்தின்பால் மாற்றாரைக் கவர்ந்து அவர்களும் முஸ்லிமாக வாழ்ந்திட ஏவுபவராக இருங்கள்.



தான, தர்ம விஷயங்களிலும், ஜகாத் முறைப்படி கணக்கிட்டு வழங்குவதிலும், பெரியோரைப் பேணுதலிலும் அல்லாஹ்வை அஞ்சி நடங்கள்.



திருமண நெறி முறைகளை நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டியவாறு சிக்கனத் திருமண முறைகளைக் கையாளுங்கள். ஆண்கள் கைக்கூலி கேட்டுப் பெறுவதை அறவேத் துறந்து மணப்பெண்ணின் விருப்பமறிந்து மஹர் கொடுத்து திருமணம் செய்வதை வாழ்வின் லட்சியமாகக் கொள்ளுங்கள். (இது நமக்கு நாமே கொண்டாடிக் கொள்ளும் இலட்சியமல்ல. இதுவே இறைவனின் தூதர் காட்டித்தந்த அழகிய முறை என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்).



பகுத்தறிவளித்து நம்மைப் பிற உயிர்களிடத்திலிருந்து மிகவும் வேறுபடுத்திக்காட்டி இம்மை, மறுமை வாழ்வின் நிலையை அறியச் செய்த இறைவனையே வழிபடுங்கள். அவனுக்கு இணை வைக்காதீர்கள்.



இறைவன் நமக்கு வழங்கிய அருட்கொடையாகிய நபி(ஸல்) அவர்களின் உண்மை வழிமுறையை மட்டும் பின்பற்றுங்கள்.

ஓதுவோம் வாருங்கள் , தினமும் ஒரு ஆயத்

سُوۡرَةُ الفَاتِحَة   
ِسۡمِ ٱللهِ ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ (١)
ٱلۡحَمۡدُ لِلَّهِ رَبِّ ٱلۡعَـٰلَمِينَ (٢) ٱلرَّحۡمَـٰنِ ٱلرَّحِيمِ (٣) مَـٰلِكِ يَوۡمِ ٱلدِّينِ (٤) إِيَّاكَ نَعۡبُدُ وَإِيَّاكَ نَسۡتَعِينُ (٥) ٱهۡدِنَا ٱلصِّرَٲطَ ٱلۡمُسۡتَقِيمَ (٦) صِرَٲطَ ٱلَّذِينَ أَنۡعَمۡتَ عَلَيۡهِمۡ غَيۡرِ ٱلۡمَغۡضُوبِ عَلَيۡهِمۡ وَلَا ٱلضَّآلِّينَ (٧)